அகில இந்திய நீதிபதிகள் சங்கம் எதிர் இந்திய ஒன்றிய வழக்கு
September 7 , 2026 6 days 89 0
அகில இந்திய நீதிபதிகள் சங்கம் எதிர் இந்திய ஒன்றியம் இடையேயான வழக்கில், மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த ஏழு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சிக்கிம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை அந்த ஏழு மாநிலங்களாகும்.
62 வயதாக நீட்டிப்பது என்பது 60 வயதில் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தகுதி மதிப்பீட்டிற்கு உட்பட்டது.
அரசியலமைப்பின் 233 முதல் 237 வரையிலான சரத்துகளின்படி, மாவட்ட நீதிபதிகள் கீழமை நீதித்துறையின் கீழ் வருகிறார்கள்.
மாவட்ட நீதிமன்றங்களில் 5.18 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.