மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 48வது அகில இந்தியக் காவல் அறிவியல் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்.
இது காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரியத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டது.
போபாலில் உள்ள மத்திய காவல்துறைப் பயிற்சிக் கழகத்தில் இந்த இரண்டு நாட்கள் அளவிலான நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
பல்வேறு காவல் படைகள், பிரிவுகள், சமூக விஞ்ஞானிகள், தடயவியல் வல்லுநர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இந்தியக் காவல் துறை சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்தாக்கங்கள் குறித்து விவாதிக்க ஒரு பொதுவானத் தளத்தை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
அகில இந்தியக் காவல் அறிவியல் மாநாட்டில் காவல் படைகள், பிரிவுகள், சமூக விஞ்ஞானிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோர் சீர்திருத்த நிர்வாகத் துறையின் அதிகாரிகளுடன் முதன்முறையாக கலந்து கொள்ள உள்ளனர்.