TNPSC Thervupettagam

அகில இந்தியப் புலிகள் மதிப்பீடு 2026

July 4 , 2026 4 days 90 0
  • தெலங்கானாவில் உள்ள அமராபாத் புலிகள் காப்பகத்தில் (ATR) புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அகில இந்தியப் புலிகள் மதிப்பீடு (AITE) 2026-இன் முதற்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.
  • நாடு முழுவதும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் புலிகள் கணக்கெடுப்பான AITE ஆனது தடயங்கள், புகைப்படக் கருவிப் பொறிகள் மற்றும் மரபணு (DNA) மாதிரிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது.
  • ATR முந்தைய கணக்கெடுப்பில் புலிகளின் பதிவு 36 ஆக இருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 42 புலிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது புலிகளின் வலுவான இருப்பைக் காட்டுகிறது.
  • வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இன் கீழ் அட்டவணை I-இல் இடம்பெற்றுள்ள இந்திய சாம்பல் ஓநாயும் இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதற்கு முந்தைய அகில இந்தியப் புலிகள் மதிப்பீட்டின்படி (2022), இந்தியாவில் 3,682 காட்டுப் புலிகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது; இது உலகளாவிய காட்டுப் புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 75% ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்