TNPSC Thervupettagam

அகில்மர ஏற்றுமதி செயல்பாட்டுத் திட்டம்

August 14 , 2026 4 days 46 0
  • இந்தியாவின் அகில்மரக் கட்டை மற்றும் அகில் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக வடகிழக்கு பிராந்தியத்தில் (NER) இருந்து அகில்மர ஏற்றுமதி மேம்பாட்டிற்கான வழிகாட்டுதலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் மதிப்பிடப்பட்டுள்ள 139.89 மில்லியன் அகில் மரங்களில் 96.6% வடகிழக்கில் உள்ளன, இதில் அஸ்ஸாம் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
  • அஸ்ஸாம் மற்றும் திரிபுரா ஆகியவை முக்கிய வள மையங்களாகும்; அகில் வாசனை திரவியங்கள், தூபங்கள் மற்றும் உயர்தர அகில் எண்ணெய் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த வழிகாட்டுதலானது செயலாக்கம், மேம்பட்ட பிரித்தெடுத்தல், சான்றிதழ், கண்காணிப்பு, பிராண்டிங்/அடையாளமிடல் மற்றும் வலுவான உலகளாவிய சந்தை இணைப்புகளில் கவனம் செலுத்துகிறது.
  • ஏற்றுமதியாளர்கள் மற்றும் சர்வதேச சந்தை மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் அகில் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.
  • வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரதமரின் மேம்பாட்டு முயற்சியின் (PM-DevINE) கீழ் அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் அகில் தொகுப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்