TNPSC Thervupettagam

அக்டோபர் மாதத்தில் தங்க இறக்குமதி

November 21 , 2025 16 hrs 0 min 7 0
  • 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக தங்க இறக்குமதிப் பதிவானது.
  • பண்டிகை மற்றும் திருமண காலத் தேவை காரணமாக தங்க கொள்முதல் 14.72 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மூன்று மடங்காக அதிகரித்தது.
  • இது 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 4.92 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 41.68 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகப் பற்றாக்குறை பதிவானது.
  • சுவிட்சர்லாந்து இந்த மாதத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதியில் 40% பங்கினைக் கொண்டிருந்தது.
  • 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சுமார் 5 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைத் தங்கத்தின் இறக்குமதி கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்