October 30 , 2021
1390 days
545
- இந்திய நாடானது அக்னி-5 எனப்படும் நிலம் விட்டு நிலம் பாயும் ஒரு உந்துவிசை ஏவுகணையினை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
- ஒடிசா கடற்கரையிலுள்ள APJ அப்துல்கலாம் தீவிலிருந்து இந்த ஏவுகணை ஏவப் பட்டது.
- இந்த ஏவுகணையானது 3 நிலைகளைக் கொண்ட திட எரிபொருள் எந்திரத்தினைப் பயன்படுத்துகிறது.
- இது அதிக துல்லியத் திறனுடன் 5000 கி.மீ. தூரம் வரையிலான இலக்குகளையும் தாக்க வல்லது.
- அக்னி-5 ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையானது “நம்பகமான குறைந்த பட்ச தடுப்புத் திறனை” கொண்டிருப்பதற்கான இந்தியாவின் கொள்கையுடன் ஒத்துப் போகிறது.
- இந்தக் கொள்கையானது “No First Use” என்பதன் மீதான உறுதிப்பாட்டினை உறுதிப் படுத்துகிறது.
- அக்னி-5 ஏவுகணையானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் கட்டமைக்கப் பட்டுள்ளது.

Post Views:
545