TNPSC Thervupettagam

அக்னிபாத் திட்டம்

June 16 , 2022 1073 days 792 0
  • அக்னிபாத் என்பது இந்திய ஆயுதப் படைகளுக்கான புதிய ஆட்சேர்ப்புத் திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ், இளைஞர்கள் ஆயுதப்படைகளில் "அக்னிவீரர்கள்" என்ற பிரிவில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.
  • 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் 4 ஆண்டுகளுக்கு அக்னிவீரர்கள் என்ற பிரிவில் ஆயுதப் படையில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்.
  • நான்கு ஆண்டுப் பதவிக் காலத்தினை நிறைவு செய்த பிறகு, சுமார் 25 சதவீத அக்னி வீரர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு வழக்கமானப் பணியாளர்களாக ஆயுதப் படைகளில் பதிவு செய்யப் படுவார்கள்.
  • அக்னிவீரர்கள் படைப் பிரிவிலிருந்து வெளியேறும் போது ₹ 11.71 லட்சம் சேவா நிதி தொகுப்பாக வழங்கப்படும்.
  • இதற்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • எனினும், இதில் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கப் பெறாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்