அங்கன்வாடி ஊழியர் பணிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீடு
November 15 , 2021 1363 days 697 0
அங்கன்வாடி ஊழியர்கள், சிறு ஊழியர்கள் மற்றும் உதவியாளர் பணிகளில் 25% வரை விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழக அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே, மதிய உணவுத் திட்டப் பணியாளர் பதவிகளில் விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு நடவடிக்கையானது செயல் முறையில் உள்ளது.
அங்கன்வாடிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் விதிகளானது 2012 ஆம் ஆண்டில் இயற்றப் பட்டது.