அங்கிகார் 2025 பிரச்சாரம் ஆனது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புற 2.0 திட்டத்தின் கீழ் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டது.
விழிப்புணர்வை ஏற்படுத்துதல், விண்ணப்பங்களை விரைவாக சரிபார்த்தல் மற்றும் அனுமதிக்கப்பட்ட வீடுகளை விரைவாக முடிப்பதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
PMAY-U திட்டத்தின் கீழ் 1.2 கோடிக்கும் அதிகமான வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்ற நிலையில் ஏற்கனவே 94 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
சமூக அணி திரட்டல் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு மூலம் மீதமுள்ள வீடுகளுக்கான அனுமதியை வழங்குவதை இந்தப் பிரச்சாரம் ஆதரிக்கும்.
நகர்ப்புற வீட்டுவசதிப் பயனாளிகளுக்குமான திட்டத்தின் கடைநிலைப் பலன் வழங்கல் மற்றும் முழுமையான மேம்பாட்டினை உறுதி செய்வதில் இது கவனம் செலுத்துகிறது.