அங்கீகரிக்கப்பட்ட பொருளாதாரச் செயல்பாட்டாளர்கள் திட்டம்
October 26 , 2025 78 days 88 0
அங்கீகரிக்கப்பட்ட பொருளாதாரச் செயல்பாட்டாளர்கள் (AEO) திட்டம் என்பது உலகச் சுங்க அமைப்பின் (WCO) SAFE கட்டமைப்பின் கீழ் ஒரு தன்னார்வ வர்த்தக வசதி முன்னெடுப்பாகும்.
இது 2016 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதியன்று, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) கீழ் இந்தியச் சுங்கத்தால் செயல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டமானது, சுங்கச் சட்டங்களுக்கு இணங்கி பாதுகாப்பான சர்வதேச விநியோகச் சங்கிலிகளைப் பராமரிக்கும் நம்பகமான வர்த்தகர்களை அங்கீகரிக்கிறது.
இது விநியோகச் சங்கிலி பாதுகாப்பை மேம்படுத்துதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், தளவாட வழங்குநர்கள் மற்றும் கிடங்கு இயக்குனர்களுக்கு சுங்க வசதி சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
AEO சான்றிதழ் ஆனது தளவாடங்கள் மற்றும் பிற இயக்குனர்களுக்கு கூடுதல் AEO-LO உடன் AEO-T1, AEO-T2, மற்றும் AEO-T3 ஆகிய மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது விரைவான சுங்க அனுமதி, ஒத்திவைக்கப்பட்ட வரி செலுத்துதல்கள், பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்கள் மூலம் உலகளாவிய அங்கீகாரம் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வர்த்தக இணக்கத்தை வழங்குகிறது.