அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஈடு செய்யும் காடு வளர்ப்பு (ACA) திட்டம்
December 7 , 2023 776 days 394 0
மத்தியப் பிரதேசத்தில் ஜமுனா திறந்தவெளி சுரங்கத் திட்டத்தின் (OCP) வெற்றியானது, இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
காடு வளர்ப்பிற்காக பழைய நிலக்கரி வயல்களை மீட்டெடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இயற்கை வளம் குறைவதால், ஜூன் 2014 ஆம் ஆண்டு அது தனது திறந்தவெளி சுரங்க நடவடிக்கைகளை நிறுத்தியது.
சமீபத்திய செயற்கைக்கோள் தரவுகளின்படி, 88.07% சுரங்கப் பகுதியானது வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டுக் காடு வளர்ப்பு என்பது வன நிலத்தை வனம் அல்லாத நோக்கங்களுக்காக மாற்றுவதுடன் அதற்குச் சமமான நிலத்தில் காடு வளர்ப்பதை உறுதி செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
இது 2016 ஆம் ஆண்டின் இழப்பீட்டுக் காடு வளர்ப்பு நிதிச் சட்டத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ தேவையாக உள்ளது.