அசானி மற்றும் கரீம் சூறாவளி
May 16 , 2022
1103 days
534
- புவியின் வடக்கு அரைக்கோளத்தில் ஒன்றும், தெற்கு அரைக்கோளத்தில் ஒன்றுமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு இணைப் புயல்கள் உருவாயின.
- இவற்றிற்கு முறையே அசானி மற்றும் கரீம் சூறாவளி என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இவை ஒரே தீர்க்கரேகையில் தோன்றி தற்போது ஒன்றுக்கொன்று விலகிச் செல்லும் இரட்டைப் புயல்களாகும்.
- ‘அசானி’ இடஞ்சுழி திசையிலும், அதன் இரட்டையான ‘கரீம்’ பூமத்திய ரேகைக்கு தெற்கே வலஞ்சுழி திசையிலும் சுழல்கின்றன.
- அசானி என்ற பெயர் இலங்கையாலும், ‘கரீம்’ என்ற பெயர் தென்னாப்பிரிக்க நாடான செசல்ஸ் நாட்டினாலும் வழங்கப்பட்ட பெயர்களாகும்.

Post Views:
534