அசாம் ஒப்பந்தத்தின் 6-வது உட்பிரிவினை அமல்படுத்துவதற்காக உயர்மட்டக் குழு ஒன்றினை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த குழுவானது 1985 ஆம் ஆண்டிலிருந்து விதிமுறை 6 நடைமுறைப்படுத்தப் படுவதற்கான நடவடிக்கைகளின் செயல்திறனை ஆய்வு செய்யும்.
இது அசாமின் சமூகம், கலாச்சாரம், மொழி அடையாளம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், அவற்றினை மேம்படுத்தவும் தேவையான அரசியலமைப்பு, சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக ரீதியான பாதுகாப்பினை வழங்குகிறது.
1979-1985 ஆண்டுகளில் நடைபெற்ற அசாம் கிளர்ச்சிக்குப் பின்னர் 1985 ஆகஸ்ட் 15 அன்று அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது.