அருகி வரும் நாரைகளைப் பாதுகாப்பதற்காக வேண்டி அசாமின் ஹர்கிலா இராணுவ மாதிரியின் கீழ் இருபது கம்போடியப் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கம்போடியாவின் டோன்லே சாப் உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியான பட்டாம்பாங் மாகாணத்தில் உள்ள பிரேக் டோல் பறவைகள் சரணாலயத்தில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியை UNEP சாம்பியன் ஆஃப் எர்த் மற்றும் ஆரண்யக்கில் உள்ள வன விலங்கு உயிரியலாளர் பூர்ணிமா தேவி பர்மன் வழிநடத்துகிறார்.
ஹர்கிலா இராணுவம் என்பது அசாமில் அருகி வரும் பெரிய சிப்பாய் நாரையைக் பாதுகாப்பதற்கு உதவிய பெண்கள் தலைமையிலான பாதுகாப்பு இயக்கமாகும்.
இந்தப் பெரும் முன்னெடுப்பு ஆனது பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் சமூகம் தலைமையிலான சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்துகிறது.