TNPSC Thervupettagam

அசாமில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை

September 18 , 2026 3 days 49 0
  • 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, அசாமில் 3,260 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன, இது உலகளாவிய எண்ணிக்கையில் சுமார் 80% ஆகும்.
  • பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் (ரைனோசரஸ் யூனிகார்னிஸ்) IUCN செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய (Vulnerable) இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.
  • காசிரங்கா தேசியப் பூங்கா 2,600 க்கும் மேற்பட்ட காண்டாமிருகங்களுக்கு தங்குமிடம் அளிக்கிறது மற்றும் இது இந்த இனத்தின் மிகப்பெரிய கோட்டையாகும்.
  • அசாமில் 2025 ஆம் ஆண்டில் காண்டாமிருக வேட்டையாடல் சம்பவங்கள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை, 2016 ஆம் ஆண்டு முதல் வேட்டையாடுதல் 86% குறைந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த இனம் வண்டல் புல்வெளிகள், ஈரநிலங்கள் மற்றும் நதிக்கரை காடுகளைச் சார்ந்துள்ளது மற்றும் இது அசாமின் மாநில விலங்காகும்.
  • இது முக்கியமாக இந்தியா மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது மற்றும் ஜாவன் மற்றும் சுமத்ரான் காண்டாமிருகங்களுடன் இணைந்து இது ஆசியாவின் மூன்று காண்டாமிருக இனங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்