TNPSC Thervupettagam

அசாமில் பொருளாதார முற்றுகை

September 22 , 2025 15 hrs 0 min 13 0
  • 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதியன்று அசாமின் டின்சுகியா மாவட்டத்தில் மோரன் சமூகத்தினர் காலவரையற்ற பொருளாதார முற்றுகையைத் தொடங்கினர்.
  • இந்த முற்றுகையானது எண்ணெய், நிலக்கரி, தேயிலை மற்றும் மரம் போன்ற முக்கிய வளங்களின் போக்குவரத்தை மாவட்டம் வழியாக மேற்கொள்வதை நிறுத்தியது.
  • இந்தப் போராட்டத்தை மற்ற ஆறு மோரன் அமைப்புகளின் ஆதரவுடன் ஆல்-மோரன் மாணவர் சங்கம் (AMSU) வழிநடத்துகிறது.
  • இந்த சமூகமானது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்தையும் மோரன் தன்னாட்சி சபையின் அரசியலமைப்பு மேம்படுத்தலையும் கோருகிறது.
  • தற்போது, ​​மோரன் சபையானது மாநிலச் சட்டத்தின் கீழ் செயல்படுகிறது, மேலும் ஆறாவது அட்டவணையின் கீழான அரசியலமைப்பு பாதுகாப்புகளைப் பெற்றிருக்கவில்லை.
  • இந்த முற்றுகையின் பொருளாதாரத் தாக்கமானது, பிராந்தியத் தொழில்களில் அவசர அரசாங்க தலையீட்டிற்கான கோரிக்கைகளை எழுப்பியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்