கௌகாத்தியின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அருகே உள்ள சிசுகிராம் செஞ்சிலுவைச் சங்கத்தில் இருந்து ஒரு சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் சமீபத்தில் மீட்டுள்ளனர்.
மேலும், வடக்கு காம்ரூப் வனப் பிரிவானது முதன்முறையாக, அசாமின் காடுகள் மற்றும் காடு அல்லாத பகுதிகளில் பிரத்தியேக சிறுத்தைகள் கணக்கெடுப்பினையும் தொடங்கியுள்ளது.
காம்ரூப் மாவட்டத்தில் உள்ள அமிங்கானில் சிறுத்தைகள் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் சிறுத்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.