அசாம் மாநிலத்தின் ஜுடிமா எனும் அரிசி மது – புவிசார் குறியீடு
September 29 , 2021 1386 days 684 0
ஜுடிமா என்ற பானமானது புவிசார் குறியீடு பெற்ற முதலாவது வடகிழக்குப் பகுதியினைச் சேர்ந்த ஒரு பானமாகும்.
ஜுடிமா என்பது பாரம்பரிய மூலிகைகளுடன் சேர்த்து வேக வைக்கப்பட்டு கலக்கப் பட்ட ஒட்டும் தன்மையிலான அரிசியிலிருந்துத் தயாரிக்கப்படும் ஒரு அரிசி மது பானம் ஆகும்.
அசாம் மாநிலத்திலுள்ள டிமாசா என்ற பழங்குடிச் சமுதாயத்தினரால் இந்த மது பானம் தயாரிக்கப் படுகிறது.
இது பாரம்பரியமாக பெண்களால் தயாரிக்கப் படுகிறது.
இந்த மதுபானமானது ஒரு தனித்துவமான இனிப்புச் சுவை உடையதாகும்.
இதனைத் தயாரிக்க ஒரு வாரமாவதோடு இதனைப் பல ஆண்டுகளுக்குச் சேமித்து வைக்கலாம்.