புல்வெளி அயல் இனங்கள் அசாமின் திப்ரு-சைகோவா தேசியப் பூங்காவை (DSNP) அச்சுறுத்துகின்றன.
இந்தியாவில் காட்டுக் குதிரைகளின் ஒரே வாழ்விடமாக DSNP உள்ளது.
உள்நாட்டுத் தாவரங்களான பாம்பாக்ஸ் சீபா (சிமாலு) மற்றும் லாகர்ஸ்ட்ரோமியா ஸ்பெசியோசா (அஜார்) ஆகியவை அயல் இனங்களுடன் இணைந்து நதிக்கரை சுற்றுச் சூழல் அமைப்பை மாற்றுகின்றன.
குரோமோலேனா ஓடோரட்டா, ஏஜெரட்டம் கோனிசோயிடுகள், பார்த்தீனியம் ஹிஸ்டெரோபோரஸ் மற்றும் மிகானியா மைக்ராந்தா ஆகியன அயல் தாவரங்களில் அடங்கும்.
2000 ஆம் ஆண்டில், DSNP பூங்காவின் 28.78% பரப்பளவில் புல்வெளிகளாகக் காணப் பட்டன ஆனால் 2013 ஆம் ஆண்டில், புதர்களின் பரவல் விரிவடைந்து, புல்வெளிப் பரப்பளவில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தியது.
2024 ஆம் ஆண்டில் தரமிழந்தக் காடுகளின் பரவல் 80.52 சதுர கிலோமீட்டராக (23.47%) அதிகரித்தன, இது பல்லுயிரியலை எதிர்மறையாகப் பாதிக்கிறது.
புல்வெளி இழப்பு வங்காள வரகுக் கோழி, வராக மான் மற்றும் சதுப்பு நில புல் கீச்சான் உள்ளிட்ட பல உயிரினங்களின் இருப்பினை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது.