TNPSC Thervupettagam

அசாம்-மிசோரம் எல்லைப் பிரச்சினை

July 30 , 2021 1476 days 654 0
  • 1972 ஆம் ஆண்டில் அசாம் மாநிலத்திலிருந்து மிசோரம் ஒரு ஒன்றியப் பிரதேசமாக பிரிக்கப் பட்டது.
  • 1987 ஆம் ஆண்டில் அதற்கு முழு அளவிலான மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.  
  • இரு மாநிலங்களுக்கிடையேயான 164.6 கி.மீ. நீள எல்லை மீதான சிக்கலானது சில நேரங்களில் மோசமான வன்முறைக்கும் வழி வகுத்துள்ளது.
  • பிரித்தானிய சகாப்தத்தின் போது வெளியிடப்பட்ட இரண்டு அறிவிப்புகளிலிருந்து இந்தப் பிரச்சினை தொடங்கியது.
  • முதலில் கச்சார் சமவெளியிலிருந்து லுசாய் மலைப்பகுதியை வேறுபடுத்திக் கூறிய 1875 ஆம் ஆண்டின் அறிவிப்பு.
  • இரண்டாவதாக லுசாய் மலை மற்றும் மணிப்பூர் இடையேயான எல்லையை வரையறுத்த 1933 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு.
  • 1873 ஆம் ஆண்டு வங்காள கிழக்கத்திய எல்லை ஒழுங்குமுறைச் சட்டத்தின் வாயிலாக வெளியிடப்பட்ட 1875 ஆம் ஆண்டு அறிவிப்பின் அடிப்படையில் அந்த நிலம் தங்களுக்குச் சொந்தம் என மிசோரம் மாநிலம் கோருகிறது.
  • அசாம் மாநிலம் தனது பங்கிற்கு, அந்த நிலம்  தன்னுடையது எனக் கோருகிறது.
  • மணிப்பூர் மாகாணத்திலிருந்து முன்னதாக லுசாய் மலைப்பகுதி என்று அறியப்பட்ட மிசோரம் பகுதியை வரையறுத்த மாநில அரசின் 1933 ஆம் ஆண்டின் அறிவிப்பினை இது முன் வைக்கிறது.
  • காலனித்துவ ஆட்சியின் போது மிசோரமானது அசாமின் ஒரு மாவட்டமாக லுசாய் மலைப்பகுதி என அழைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்