ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள அசுர்கர் கோட்டை என்ற குடியிருப்பில் ஒரு மேம்பட்டக் கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறையைக் கொண்டு ஆய்வு நடத்தப் பட்டது.
இதன்படி, இந்தக் குடியிருப்புப் பகுதி கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டு அல்லது இரும்புக் காலத்தைச் சேர்ந்தது என்று கணித்துள்ளது.
இது ஒடிசாவின் பழமையான கோட்டையான சிசுபால்கர் கோட்டையை விட இந்தக் கோட்டை 2,500 முதல் 2,600 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடுகிறது.
இந்தக் குடியிருப்புப் பகுதியானது மௌரியர் காலத்தைச் சேர்ந்ததாக முன்னர் நம்பப் பட்டது.
முதுகலை வரலாற்றுத் துறையின் சார்பில் 1973 ஆம் ஆண்டு N.K. சாஹு என்பவரால் இந்த இடத்தில் முதல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.