- அரசின் பணமாக்கல் திட்ட இலக்கின் கீழ் ‘வெகுவாக பயன்படுத்தப்படாத பொதுத் துறை சொத்துக்களான’ அசோக் என்ற 5 நட்சத்திர தங்கும் விடுதியானது நான்கு ஆண்டுகளுக்குத் தனியாரிடம் குத்தகைக்கு விடப்படும்.
- தேசியப் பணமாக்கல் தொடர் திட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட எட்டு இந்தியச் சுற்றுலா மேம்பாட்டுக் கழகச் சொத்துக்களுள் அசோக் மற்றும் சாம்ராட் ஆகிய தங்கும் விடுதிகளும் அடங்கும்.
அசோக் குழும தங்கும் விடுதிகள்
- இவை கடந்த 40-50 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு தனித்த (பிராண்ட்) மதிப்புடன் கூடிய இந்தியச் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் கீழான முன்னணி தங்கும் விடுதிகள் ஆகும்.
- பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப் படும் அனைத்து அரசு நிகழ்வுகளுக்கும் இந்த விடுதிகள் ஒரு முக்கிய அரங்கமாக உள்ளன.