இந்தியா முழுவதும் செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கான ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பாக அச்சகம் மற்றும் எண்ணிம ஊடகச் சங்கத்தினை (PADMA) அறிவித்து மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
அச்சகம் மற்றும் எண்ணிம ஊடகச் சங்கம் என்பது 47 செய்தி வெளியீட்டு நிறுவனங்களைக் கொண்ட ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பாகும்.
இந்த அமைப்பானது அதன் உறுப்பினர்களாக உள்ள வெளியீட்டு நிறுவனங்களின் தளங்களில் வெளியிடப்படும் எண்ணிம ஊடகச் செய்தி உள்ளடக்கம் தொடர்பான குறைகளைத் தீர்ப்பதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள அமைப்பாகும்.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மூல் சந்த் கார்க் இந்த அமைப்பிற்குத் தலைமை தாங்குவார்.
இந்த அமைப்பில் பகுதி நேர உறுப்பினரும் இடம் பெறுவர்.