ஜும்ரி புலியானது பந்தவ்கரில் இருந்து கொண்டு வரப்பட்ட பிறகு, அச்சனக்மர் புலிகள் வளங்காப்பகத்தில் (சத்தீஸ்கர்) 2022 ஆம் ஆண்டில் 5 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 18 ஆக உயர்ந்தது.
பிலாஸ்பூரில் அமைந்துள்ள அச்சனக்மர் புலிகள் வளங்காப்பகம், 1975 ஆம் ஆண்டில் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டில் புலிகள் வளங் காப்பகமாக மாற்றப்பட்டது.
இது அச்சனக்மர்–அமர்கந்தக் உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.
இது கன்ஹா மற்றும் பந்தவ்கர் புலிகள் வளங்காப்பகங்களுக்கு இடையேயான ஒரு முக்கிய வழித் தடமாகச் செயல்படுகிறது.
இந்தக் காப்பகத்தில் பைகா (எளிதில் பாதிக்கப்படக் கூடியப் பழங்குடியினர் குழு), கோண்ட் மற்றும் யாதவ் போன்ற பழங்குடியினச் சமூகங்கள் வசிக்கின்றனர்.