குரோஷிய நாட்டின் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சிடமிருந்து இந்தியப் பிரதமர் வெஸ்டினின் சமஸ்கிருத இலக்கணத்தின் மறுபதிப்பைப் பெற்றார்.
1790 ஆம் ஆண்டு குரோஷியாவின் அறிவியல் ஆய்வாளரும் சமயப் பரப்பாளருமான பிலிப் வெஸ்டின் (1748-1806) என்பவரால் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஒரு சமஸ்கிருத இலக்கணம் ஆனது இலத்தீன் மொழியில் எழுதப்பட்டது.
1774 ஆம் ஆண்டில் மலபார் பகுதிக்கு ஒரு சமயப் பரப்பாளராக வருகை தந்த பிலிப் வெஸ்டின், பின்னர் மலபார் கடற்கரையில் கிறிஸ்துவ மதத்தின் ஒரு பிரதான குருவாக ஆனார்.
1790 ஆம் ஆண்டில், அச்சிடப்பட்ட முதல் சமஸ்கிருத இலக்கணத்தை வெளியிட்ட ஒரு பெருமை அவரையே சாரும்.
அவரை நினைவு கூரும் வகையில் ஒரு நினைவுப் பதாகையானது 1999 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் திறக்கப்பட்டது.