அச்சுறுத்தப்பட்டப் பிரிவிலிருக்கும் உயிரினங்களின் சமீபத்திய சிவப்புப் பட்டியல்
September 12 , 2021 1405 days 647 0
இந்த அறிக்கையை இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் வெளியிட்டு உள்ளது.
சமீபத்திய சிவப்புப் பட்டியலின் படி சுமார் 902 இனங்கள் அதிகாரப்பூர்வமாக அழிந்து விட்டன.
மதிப்பிடப்பட்ட உயிரினங்களில் (38,543), 30% உயிரினங்கள் (138,374) அழிவின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதையும் சிவப்புப் பட்டியல் காட்டுகிறது.
இதன் படி காடுகளில் வாழும் சுமார் 80 இனங்கள் அழிந்து விட்டன, 8,404 இனங்கள் மிகவும் அருகி வரும் நிலையில் உள்ளன, 14,647 இனங்கள் அருகி வரும் நிலையில் உள்ளன, 15,492 இனங்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடியவை மற்றும் 8,127 இனங்கள் அச்சுறுத்தலுக்கு அருகில் உள்ளன.
அட்லாண்டிக் ப்ளூஃபின் டுனா என்ற மீனானது அருகி வரும் நிலையில் இருந்து குறைந்த பட்ச அக்கறை நிலைக்கு நகர்ந்துள்ளது.
தெற்கு ப்ளூஃபின் டுனா என்ற மீனானது மிகவும் அருகி வரும் நிலையில் இருந்து அருகி வரும் நிலைக்கு நகர்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய உயிருள்ள பல்லியான கொமோடோ டிராகன் ஆனது எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்து அருகி வரும் நிலைக்கு நகர்ந்துள்ளது.
இந்த இனமானது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படுவதோடு உலகப் பாரம்பரிய வகைக்காக பட்டியலிடப்பட்ட கொமோடோ தேசியப் பூங்காவில் மட்டுமே காணப்படுகிறது.