TNPSC Thervupettagam

அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

July 1 , 2026 2 days 68 0
  • 2002 ஆம் ஆண்டின் உயிரியல் பன்முகத்தன்மை சட்டத்தின் கீழ் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களை அறிவிப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) தேசியப் பல்லுயிர் ஆணையம் (NBA) வெளியிட்டது.
  • அறிவியல் பூர்வமான மதிப்பீடு, பங்குதாரர்களின் ஆலோசனை, சரிபார்த்தல், அறிவிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டமிடல் ஆகியவற்றிற்கான படிப்படியான செயல் முறையை இந்த SOP வழங்குகிறது.
  • உயிரினங்களை அடையாளம் காண அறிவியல் சான்றுகள், கள ஆய்வுகள் மற்றும் பாரம்பரிய அறிவைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை இது அறிவுறுத்துகிறது.
  • பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள், இந்தியத் தாவரவியல் மதிப்பாய்வு மற்றும் இந்திய விலங்கியல் மதிப்பாய்வு ஆகியவை இச்செயல்முறையில் ஈடுபட்டுள்ளன.
  • இந்தியா முழுவதும் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் காலமுறை மதிப்பாய்வுக்கு இது துணைபுரிகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்