COP31 மாநாட்டிற்கு முன்னதாக, நான்காவது ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை வாரம் அஜர்பைஜானின் பாகு நகரில் தொடங்கியது.
பருவநிலை நடவடிக்கை, நிதி, தகவமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து விவாதிக்க இந்த கூட்டம் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடத்தப் படுகிறது.
பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள மேம்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை கட்டமைப்பின் மீதான விவாதங்கள் உமிழ்வுகள், தகவமைப்பு மற்றும் பருவநிலை ஆதரவு குறித்த அறிக்கையிடலில் கவனம் செலுத்துகின்றன.
COP29 (அஜர்பைஜான்), COP30 (பிரேசில்) மற்றும் COP31 (துருக்கியே) ஆகிய மாநாடுகளின் தலைமைத்துவ அமைப்புகள் இந்த உரையாடலில் பங்கேற்கின்றன.
கார்பன் சந்தைகள், நியாயமான மாற்றம், தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs), தகவமைப்பு மற்றும் பருவநிலை நிதி ஆகியவை முக்கிய விவாதப் பொருள்களாகும்.
2026 ஆம் ஆண்டின் பாகு பருவநிலை நடவடிக்கை வாரமானது, ஐ.நா பருவநிலை வாரத்துடன் இணைந்து நடத்தப்பட்டு, முதலீட்டாளர்கள், வணிகங்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களை ஒன்றிணைக்கிறது.