அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா ஆகியவை வாஷிங்டனில் ஓர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
2023 ஆம் ஆண்டில் அஜர்பைஜானின் இராணுவ படையெடுப்பினைத் தொடர்ந்து நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் சுமார் நாற்பது ஆண்டுகளாக நீடித்த மோதலை இந்த ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவருகிறது.
டிரம்ப் வழித்தடம் எனப்படும் போக்குவரத்து வழித்தடத்தினை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இது ஆர்மேனிய சட்டத்தின் கீழ், ஆர்மேனிய பிரதேசத்தின் வழியாக அஜர்பைஜானையும் அதன் நக்சிவன் பகுதியையும் இணைக்கும்.
1992 ஆம் ஆண்டு முதல், மோதல் நடவடிக்கைகளில் நடுவண் அமைப்பாக இருந்த ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான மின்ஸ்க் குழு அமைப்பு (OSCE மின்ஸ்க் குழு) கலைக்கப்படும்.