TNPSC Thervupettagam

அஞ்சல் சேவை கட்டுப்பாடுகள்

August 27 , 2025 29 days 50 0
  • இந்திய அஞ்சல் துறையானது, ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் அமெரிக்காவிற்கான பெரும்பாலான அஞ்சல் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.
  • 800 அமெரிக்க டாலர்கள் வரை மதிப்புள்ள பொருட்களுக்கான வரி விலக்கை நீக்கும் அமெரிக்க நிர்வாக உத்தரவு எண் 14324 என்பதைப் பின்பற்றி இந்த இடை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • 100 அமெரிக்க டாலர்கள் வரை மதிப்புள்ளப் பரிசுகளைத் தவிர, அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் ஏற்றுமதிகளுக்கும் தற்போது சுங்க வரிகள் விதிக்கப்படும்.
  • அமெரிக்கச் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் விதிப்படி, சேவை நிறுவனங்கள் வரிகளை வசூலிக்க வேண்டும், ஆனால் தெளிவற்ற வழிகாட்டுதல்கள் விமான நிறுவனங்கள் அஞ்சல் சார்ந்த சரக்குகளை மறுக்கக் காரணமாக அமைந்தன.
  • சிக்கலைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள காலத்தில் அஞ்சல் துறையானது கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட பரிசுகளைத் தொடர்ந்து ஏற்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்