TNPSC Thervupettagam

அடல் ஓய்வூதியத் திட்ட பதிவு வளர்ச்சி

April 25 , 2026 2 days 52 0
  • அடல் ஓய்வூதியத் திட்டம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி மொத்தம் 9 கோடிப் பதிவுகளைக் கடந்துள்ளது.
  • இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து அதிகபட்ச வருடாந்திரச் சேர்க்கையாக 2025-26 ஆம் நிதியாண்டில், 1.35 கோடி புதிய சந்தாதாரர்களைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
  • அடல் ஓய்வூதியத் திட்டம் 2015 ஆம் ஆண்டு மே 9 அன்று தொடங்கப்பட்டது.
  • இத்திட்டம் முக்கியமாக அமைப்பு சாராத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு சமூகப் பாதுகாப்பை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) கட்டுப் படுத்தப் படுகிறது.
  • பங்களிப்பு அளவின் அடிப்படையில் 60 வயதிற்குப் பிறகு நிலையான மாதாந்திர ஓய்வூதியத்தை இத்திட்டம் உறுதி செய்கிறது மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்