அடல் ஓய்வூதியத் திட்டத்தின் (APY) கீழான பதிவானது சமீபத்தில் 5 கோடி என்ற எண்ணிக்கையினைக் கடந்துள்ளது.
அடல் ஓய்வூதியத் திட்டம் என்பது 2015 ஆம் ஆண்டு மே 09 அன்று இந்திய அரசினால் தொடங்கப்பட்ட முதன்மையான சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஆகும்.
இந்திய அரசானது, அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், வங்கிகளுக்கு ஆண்டுதோறும் பல்வேறு இலக்குகளை நிர்ணயிக்கிறது.
2022 ஆம் ஆண்டில் 29 வங்கிகள் அவற்றின் இலக்கை எட்டியுள்ளன.
பல்வேறு அமைப்பு சாராத் துறைகளில் பணிபுரியும் மக்களுக்கு முதியோர் வருமானப் பாதுகாப்பை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் வருமான வரி செலுத்தும் எந்தவொரு நபரும் புதிய அடல் ஓய்வூதியத் திட்டம் கணக்கைத் தொடங்க அனுமதிக்கப் படுவது இல்லை.