TNPSC Thervupettagam

அடல் சுரங்கப் பாதை

October 8 , 2020 1761 days 741 0
  • இந்தியப் பிரதமர் அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தின் ரோஹடாங்கில் அடல் சுரங்கப் பாதையைத் திறந்து வைத்துள்ளார்.
  • இது மணாலியின் அருகில் உள்ள சோலாங் பள்ளத்தாக்கையும் லாஹூல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள சிசுவையும் இணைக்கின்றது.
  • இது 9.02 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சுரங்கப் பாதையாகும்.
  • இது 3,000 மீட்டர்களுக்கு மேலே அமைந்த உலகில் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப் பாதையாகும்.
  • எல்லைச் சாலைகள் அமைப்பினால் கட்டமைக்கப்பட்ட இந்தச் சுரங்கப் பாதையானது, மணாலி மற்றும் லேஹ் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட தொலைவை 46 கிலோ மீட்டர் என்ற அளவில் குறைக்கும்.
  • முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் 2000 ஆம் ஆண்டு ஜுன் 03 அன்று அடல் சுரங்கப் பாதையைக் கட்டமைக்க முடிவு செய்தார்.
  • இந்தச் சுரங்கப் பாதைக்கான அடிக்கல் ஆனது 2002 ஆம் ஆண்டு மே 26 அன்று போடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்