TNPSC Thervupettagam

அடல் புஜல் யோஜனா

December 25 , 2019 2021 days 746 0
  • பிரதமர் நரேந்திர மோடி புது தில்லியில் அடல் புஜல் யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இது நிலத்தடி நீர் வளங்களை நீடித்த முறையில் நிர்வகிப்பதற்கான ஒரு திட்டமாகும்.
  • மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த நிகழ்வில், ரோத்தங் கணவாயில் உள்ள 8.8 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு உத்தி சார்ந்த சுரங்கப் பாதைக்கு  வாஜ்பாயின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

திட்டம் பற்றி:

  • 2024 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குடி தண்ணீர் வழங்க இந்தத் திட்டம் உதவ இருக்கின்றது.
  • மத்திய ஜல் சக்தி என்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள நீர்வளத் துறையானது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கின்றது.
  • இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் காலம் 2020 முதல் 2025 ஆண்டு வரை ஆகும்.
  • உலக வங்கியின் கடன் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி உள்ளிட்ட முழு நிதியும் மாநிலங்களுக்கு மானியமாக வழங்கப்பட இருக்கின்றது.

ரோத்தங் சுரங்கப் பாதை

  • இது இமயமலையின் கிழக்குப் பகுதியில் உள்ள பீர் பாஞ்சல் மலைத்தொடரில் லே-மணாலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
  • லடாக் செல்லும் இரண்டு பாதைகளில் இதுவும் ஒன்றாகும்.
  • ரோத்தங் கணவாயானது குளிர்காலங்களில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப் புயல்களைப் பெறுகின்றது. ஒரு வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே இந்த சாலைப் போக்குவரத்து திறந்து விடப்படுகின்றது.
  • குளிர்காலத்தில் சுரங்கப் பாதை நெடுஞ்சாலையானது திறந்து வைக்கப் பட்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்