2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் அடல் புத்தாக்கத் திட்டத்தினைத் தொடரச் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
10,000 அடல் மேம்பாட்டு ஆய்வகங்களையும் 101 அடல் புத்தாக்கக் காப்பு மையங்களையும் உருவாக்குதல் மற்றும் அடல் புதிய இந்தியா சவால்கள் திட்டம் மூலம் 200 தொழில்முனைவோருக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட இலக்குகளை இந்தத் திட்டம் கொண்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகள், பல்கலைக் கழகம், ஆராய்ச்சி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிலைகளில் ஈடுபடுவதன் மூலம் நாடு முழுவதும் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவிற்கான ஒரு சூழலமைவினை உருவாக்குவதே இதன் இலக்காகும்.