TNPSC Thervupettagam

அடிப்படை ஆண்டு திருத்தம் 2022-23

March 2 , 2026 179 days 311 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), 2022–23 அடிப்படை ஆண்டைக் கொண்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீடுகளின் புதிய தொடரை வெளியிட்டது.
  • பழைய 2011–12 அடிப்படை ஆண்டுத் தொடரை மாற்றும் இந்தப் புதிய தொடர், சரக்கு மற்றும் சேவை வரி (GST), பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS), பெருநிறுவன விவகார அமைச்சகம் (MCA) மற்றும் வீட்டு ஆய்வுகள் ஆகியவற்றிலிருந்து புதுப்பிக்கப் பட்ட தரவுகளைப் பயன்படுத்தி துல்லியத்தை மேம்படுத்துகிறது.
  • 2025–26 நிதியாண்டிற்கான (FY) உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6% வளர்ச்சியுடன் 322.58 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6% வளர்ச்சியடைந்து345.47 லட்சம் கோடியாக உள்ளது.
  • 1950–51 வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முந்திய தொடர் டிசம்பர் 2026 க்குள் வெளியிடப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்