தமிழ்நாடு மற்றும் மேகாலயாவில் புதிய பல்லுயிர்ப் பாதுகாப்புத் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
தேசிய பல்லுயிர் ஆணையத்துடன் இணைந்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தால் (MoEFCC) இத்திட்டம் வழிநடத்தப்படுகிறது.
2025-2030 ஆம் ஆண்டிற்கான 4.88 மில்லியன் டாலர் நிதியுதவியுடன் உலகளாவிய சுற்றுச் சூழல் வசதி (GEF) மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) ஆகியவற்றால் இத்திட்டம் ஆதரிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலைப் புலிகள் காப்பகம் ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது.
மேகாலயாவில், மேற்கு காரோ மலைப்பகுதி மாவட்டத்தில் உள்ள நோக்ரெக் உயிர்க் கோளக் காப்பகத்தை இது உள்ளடக்கியுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துதல், சமூகப் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் அணுகல் மற்றும் பலன் பகிர்வு (ABS) மற்றும் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) ஆகியவற்றின் மூலமான நிதியுதவிக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.