அடிமை வர்த்தகம் மற்றும் அதன் ஒழிப்பிற்கான சர்வதேச நினைவு தினம் 2025 - ஆகஸ்ட் 23
August 25 , 2025 95 days 99 0
அட்லாண்டிக் கடல் கடந்த (கடல் வழியாக) அடிமை வர்த்தகத்தினால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களை இந்த தினம் நினைவு கூர்கிறது.
அடிமைத்தனத்தின் வரலாற்று அநீதிகளை ஒப்புக்கொள்வதற்கும் அடிமைப்படுத்தப் பட்ட மக்களின் எதிர்ப்பைக் கொண்டாடுவதற்கும் 1997 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் இந்த நாள் தொடங்கப்பட்டது.
1791 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22–23 ஆம் தேதகளில், செயிண்ட் டொமிங்குவில் (இன்றைய ஹைத்தி) அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கினர் என்ற ஒரு நிலையில் இது ஹைத்திய புரட்சியைத் தூண்டியது.
இந்த எழுச்சி முதல் நவீன கருப்பின குடியரசு உருவாவதற்கு வழி வகுத்ததோடு மேலும் ஒடுக்குமுறைக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பின் அடையாளமாக மாறியது.