TNPSC Thervupettagam

அடுத்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி - சரத் அரவிந்த் போப்டே

October 21 , 2019 2092 days 728 0
  • வயது மூப்பின் அடிப்படையில் தனக்கு அடுத்துப் பதவிக்கு வருபவரை நியமிக்க,  இந்தியத்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் நீதிபதி சரத் அரவிந்த் போப்டேவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.
  • இந்தியத்  தலைமை நீதிபதி கோகாய்க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக நீதிபதி போப்டே உள்ளார்.
  • வழக்கமாக பதவியிலிருந்து விடைபெறும் தலைமை நீதிபதி தனக்கு அடுத்துப் பதவிக்கு வருபவர் பற்றிய பரிந்துரையை 30 நாட்களுக்கு முன்னர் அனுப்பி, அடுத்த இந்தியத்  தலைமை நீதிபதியை நியமிக்கும் பணியைத் தொடங்குகிறார்.
  • போப்டே முன்னாள் இந்திய தலைமை நீதிபதி முகமது ஹிதயத்துல்லாவுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் நாக்பூர் பிராந்தியத்தைச் சேர்ந்த இரண்டாவது நீதிபதியாகவும்,  இந்தியாவின் 47வது தலைமை நீதிபதியாகவும் இருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்