TNPSC Thervupettagam

அடுத்த தலைமுறை GST சீர்திருத்தங்கள்

September 24 , 2025 3 days 43 0
  • அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (GST) சீர்திருத்தங்கள் நவராத்திரியின் முதல் நாளில் தொடங்கும் என்று பிரதமர் அறிவித்தார்.
  • சீர்திருத்தங்களுடன் தொடங்கும் GST பச்சத் உத்சவ் ஆனது, குடிமக்கள் பல துறைகளில் குறைந்த விலையில் பொருட்களை வாங்க உதவும்.
  • திருத்தப்பட்ட GST அமைப்பு நகர சுங்க வரி/ஆக்ட்ரோய், நுழைவு வரி, கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி, விற்பனை வரி மற்றும் சேவை வரி போன்ற பல பழைய வரிகளை மாற்றியமைத்து 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரண்டு முக்கிய வரி அடுக்குகளை மட்டுமே தக்க வைத்துக் கொள்வதன் மூலம் வரிக் கட்டமைப்பை எளிதாக்குகிறது.
  • உணவுப் பொருட்கள், மருந்துகள், சோப்பு, பல் துலக்குதல், பற்பசை, சுகாதாரக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது தற்போது வரி விதிக்கப்படாது அல்லது 5 சதவீத வரி விதிக்கப்படும்.
  • இந்தச் சீர்திருத்தங்கள் முந்தைய வரி முறையில் உள்ள செயல்திறமையின்மையை நீக்குதல், காகித/அறிக்கையிடல் வேலைபாடுகளைக் குறைத்தல் மற்றும் வர்த்தகத்திற்கான மாநிலங்களுக்கு இடையேயான தடைகளை நீக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்