அடையாறு கழிமுகச் சதுப்பு நிலங்களின் புத்துயிர்ப்பு நடவடிக்கை
June 18 , 2025 50 days 79 0
அடையாறு கழிமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சதுப்புநிலங்களின் புத்துயிர்ப்பு குறித்த நடவடிக்கைகள் ஆனது கணிசமான அளவு கார்பனைப் பிரித்தெடுத்து சேமித்துள்ளன.
இந்தச் சதுப்புநிலங்கள் ஆனது சுமார் 1,195 டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான வருடாந்திர கார்பன் பிரித்தெடுத்தல் விகிதத்தை அடைந்துள்ளன.
காடு வளர்ப்பு இயக்கம் ஆனது, 2008 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சென்னை நதிகள் புத்துயிர்ப்பு அறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட்டது.
இது வரையில் ஆறு இனங்களைக் கொண்ட இச்சதுப்பு நிலச் சுற்றுச்சூழல் அமைப்பு ஆனது 2,288 டன் கார்பன் அல்லது 8,397 டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான ஒரு உமிழ்வைச் சேமித்துள்ளது.
மேலும், இச்சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்பு ஆனது ஆண்டிற்கு 325.71 டன் கார்பன் பிரித்தெடுத்தல் விகிதத்தைக் கொண்டுள்ளது.