அட்டகாமா பாலைவனத்திற்கு அடியில் கண்டறியப்பட்ட உயிரினங்கள்
May 16 , 2026 29 days 88 0
சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தின் மேற்பரப்பிற்கு இரண்டு மீட்டர் கீழே ஒரு நுண்ணுயிர் சுற்றுச்சூழல் அமைப்பை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சுற்றுச்சூழல் அமைப்பில் பாக்டீரியாக்கள், ஆர்க்கியா, டிஎன்ஏ மற்றும் 'நெமடோட்கள்' எனப்படும் நுண்ணிய உருளைப் புழுக்கள் தீவிர பாலைவன நிலைமைகளில் வாழ்கின்றன.
அட்டகாமா பாலைவனம் உலகின் வெப்பமான மற்றும் வறண்ட பாலைவனமாகும் என்பதோடு இதன் சூழல் செவ்வாய் கிரகத்தைப் போலவே இருப்பதால் இது வானியல் உயிரியல் ஆய்வுகளுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
முந்தைய ஆய்வுகள் மண்ணின் முதல் 30 சென்டிமீட்டர் ஆழத்தில்தான் நுண்ணுயிர் வாழ்க்கையைக் கண்டறிந்தன ஆனால் சமீபத்திய கண்டுபிடிப்புகள் இன்னும் அதிக ஆழத்தில் உயிர் பிழைக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன.
கொலோன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆறு பிராந்தியங்களில் இருந்து 112 மண் மாதிரிகளைச் சேகரித்து, 21 நெமடோட் குடும்பங்களைச் சேர்ந்த குறைந்தது 36 பேரினங்களை அடையாளம் கண்டுள்ளனர்.