TNPSC Thervupettagam

அட்லஸ் அணுசக்தி முன்னெடுப்பு

September 18 , 2026 2 days 45 0
  • சர்வதேச அணுசக்தி முகமையானது (IAEA), பொதுப் போக்குவரத்து கப்பல்கள் மற்றும் மிதக்கும் அணுமின் நிலையங்களில் அணுசக்தியை மேம்படுத்துவதற்காக அட்லஸ் (கடலில் பயன்பாடுகளுக்கு உரிமம் பெற்ற அணுத் தொழில்நுட்பங்கள்) திட்டத்தைத் தொடங்கியது.
  • இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 26 நாடுகள் அட்லஸ் திட்டத்தை ஆதரித்து ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
  • சிறிய அளவிலான அணு உலைகள் (SMR) போன்ற மேம்பட்ட உலைகள் மூலம் எரிபொருள் நிரப்பப்படாமலேயே கப்பல்களை நீண்ட காலத்திற்கு இயக்க முடியும்.
  • மிதக்கும் அணுமின் நிலையங்கள் கடலோர மற்றும் தொலைதூரப் பகுதிகள் மற்றும் கடல்சார் தொழில்களுக்கு மின்சாரம் வழங்க முடியும்.
  • பாதுகாப்பு, அரணமைப்பு, பாதுகாப்புகள் மற்றும் ஒழுங்குமுறைச் சிக்கல்களை உள்ளடக்கிய ஆறு நிபுணர் குழுக்கள் மூலம் 2026 ஆம் ஆண்டில் அட்லஸ் திட்டத்தின் அமலாக்கம் தொடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்