அட்லாண்டிக் பகுதிகளில் நிகழும் அடிமைத்தனம் மற்றும் அடிமைகள் வர்த்தக முறையால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் சர்வதேச தினம் – மார்ச் 25
March 28 , 2021 1582 days 457 0
இத்தினமானது கொடூரமான அடிமை முறையின் பிடியில் சிக்கி அவதிப்பட்டு இறந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக கடைபிடிக்கப் படுகிறது.
மேலும் தற்போதுள்ள இனவெறி மற்றும் தீமை ஆகியவற்றின் ஆபத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
பாதிக்கப் பட்டவர்களுக்கு நிரந்தர மரியாதை செலுத்தும் வகையில் நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப் பட்டுள்ளது.