அணு ஆயுதங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான பன்னாட்டு நாள் - செப்டம்பர் 26
September 28 , 2020 1771 days 505 0
அணு ஆயுதங்களால் மனிதகுலத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த பொதுவான விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது 2013 ஆம் ஆண்டில் இந்நாளை அறிவித்தது,
இது 2014 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள ஐ.சி.ஏ.என் (ICAN - International Campaign to Abolish Nuclear Weapons) பிரச்சாரகர்களால் இந்நாள் அனுசரிக்கப் படுகிறது.
ஐ.சி.ஏ.என் என்பது அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான ஒரு பன்னாட்டுப் பிரச்சாரம் ஆகும்.
இது 2017 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றது.