அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 26
September 29 , 2023 713 days 259 0
அணு ஆயுதங்களால் மனித குலத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் அவற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்கான அவசியம் குறித்த பொது விழிப்புணர்வை மேம்படுத்தச் செய்வதே இந்த நாளின் நோக்கமாகும்.
1983 ஆம் ஆண்டு மாஸ்கோவிற்கு எதிரான அமெரிக்க உந்துவிசை ஏவுகணைத் தாக்குதலைத் தவறாகக் கண்டறிந்த சோவியத் அணு ஆயுத முன்னெச்சரிக்கை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சற்று ஏறக்குறைய ஒரு அணு ஆயுதப் போர் தொடங்கவிருந்த சம்பவத்தின் வருடாந்திர நினைவு தினமும் செப்டம்பர் 26 ஆம் தேதி ஆகும்.
1959 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அணு ஆயுதங்களை முற்றிலும் குறைத்தல் என்ற நோக்கத்தை முன் வைத்தது.
1996 ஆம் ஆண்டில், விரிவான அணு சக்தி சோதனை தடை ஒப்பந்தம் உலக நாடுகளின் கையொப்பத்தினைப் பெறுவதற்காக அறிமுகப்படுத்தப் பட்டது.
இன்றும் சுமார் 12,512 அணு ஆயுதங்கள் புழக்கத்தில் எஞ்சியுள்ளன.