அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 26
September 29 , 2022 1100 days 426 0
அணு ஆயுதங்களால் மனித குலத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் அவற்றை முற்றிலுமாக அகற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய பொது விழிப்புணர்வை மேம்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1959 ஆம் ஆண்டில் பொது மற்றும் முழுமையான ஆயுதக் குறைப்பு குறிக்கோளினை அங்கீகரித்தது.
ஆயுதக் குறைப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட பொதுச் சபையின் முதல் சிறப்பு அமர்வு என்பது 1978 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2017 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் தேதியன்று அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஒப்பந்தமானது ஏற்றுக் கொள்ளப் பட்டது.
20 ஆண்டுகளில், இது வரை பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுதக் குறைப்புக்கான முதல் பன்னாட்டுச் சட்டப்பூர்வக் செயற்கருவி என்பதால் இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகும்.