அணு ஆயுதச் சோதனைகளுக்கு எதிரான சர்வதேச விழிப்புணர்வு தினம் 2026 - ஆகஸ்ட் 29
August 29 , 2026 15 days 94 0
2009 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) இந்த நாளை அங்கீகரித்தது.
அணு ஆயுத சோதனைகளின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதையும் அவற்றை நிறுத்துவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று கஜகஸ்தானில் உள்ள செமிபாலாடின்ஸ்க் அணு ஆயுதச் சோதனை தளம் மூடப்பட்டதை இந்த நாள் நினைவுபடுத்துகிறது.
அனைத்து அணு ஆயுத சோதனைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 1996 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) ஏற்றுக் கொள்ளப் பட்டது, ஆனால் இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த நாள் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் கடைபிடிக்கப்பட்டது.