இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களின் பட்டியலைப் பரிமாறிக் கொண்டன.
பாகிஸ்தான் மற்றும் இந்திய நாடுகளுக்கிடையேயான அணுசக்தி நிறுவல்கள் மற்றும் அணுசக்தி வளாகங்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கான தடை ஒப்பந்தத்தின்படி இந்த பரிமாற்றமானது செய்து கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தமானது அணுசக்தியில்லாத தாக்குதல் ஒப்பந்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
1988 டிசம்பர் 31-ல் கையொப்பமிடப்பட்டு 1991 ஜனவரி 27 ஆம் நாள் நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 01 ஆம் தேதி இந்த பரிமாற்றம் நிகழ்கிறது.