அணுசக்தி சோதனைக்கு எதிரான சர்வதேச தினம் – ஆகஸ்ட் 29
August 30 , 2021 1460 days 504 0
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஆகஸ்ட் 29 ஆம் தேதியினை அணுசக்தி சோதனைக்கு எதிரான சர்வதேச தினமாக அறிவித்தது.
அணு ஆயுதங்களின் சோதனை வெடிப்புகளின் விளைவுகள் பற்றியும் (அ) எந்தவொரு அணுசக்தி வெடிப்பின் விளைவினைப் பற்றிய விழிப்புணர்வினையும் கல்வியையும் அதிகரிப்பதற்காகவும் அணுசக்தி ஆயுதமற்ற உலகை உருவாக்குதல் என்ற இலக்கை அடைவதற்கான ஒரு வழிமுறையாக அணுசக்தி ஆயுதங்களின் பயன்பாடு நிறுத்தப் பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தத் தீர்மானம் அழைப்பு விடுக்கிறது.
இந்தத் தீர்மானமானது கசகஸ்தான் குடியரசினால் முன்மொழியப் பட்டது.
2010 ஆம் ஆண்டானது அணுசக்தி சோதனைக்கு எதிரான முதலாவது சர்வதேச தினத்தைக் குறிக்கின்றது.